செய்திகள் :

டிரம்ப்புக்கு போட்டியாக எலான் மஸ்க்! அமெரிக்காவுக்கு விடுதலையா?

post image

அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றை எலான் மஸ்க் தொடங்கியதாக அறிவித்தார்.

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசு கொண்டுவந்த செலவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எலான் மஸ்க், அமெரிக்காவை ஊழல் மற்றும் வீண் செலவு மூலம் திவாலாக்க முயற்சிக்கும் ஒரு கட்சி அரசியலின் ஆட்சியில்தான் நாம் இருக்கிறோம்; ஜனநாயக ஆட்சியில் நாம் இல்லை என்று விமர்சித்தார்.

தொடர்ந்து, அமெரிக்கர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சி தொடங்கப்பட்டதாகவும் அறிவித்தார்.

ஜூலை 4 ஆம் தேதியில் ``உங்களுக்கு விடுதலை வேண்டுமா? அமெரிக்கன் பார்ட்டி தொடங்கலாமா?’’ என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார். எலான் மஸ்க்கின் கேள்விக்கு சாதகமாக, 65.4 சதவிகிதத்தினர் `ஆம்’ என்று பதிலளித்தனர்.

அமெரிக்க அரசு கொண்டுவந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் டெஸ்லா நிறுவனரும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.

ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில் என்ற செலவு மசோதாவை டிரம்ப் கொண்டுவர முயன்றபோது, அதனை ஏற்க மறுத்த எலான் மஸ்க், இந்த மசோதாவால் நாட்டின் கடன் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார். மேலும், மசோதாவை ஆதரிப்பது தவறு என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், டிரம்ப் கூறும் மசோதாவால், அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் கடன் 3.4 டிரில்லியன் டாலர்வரை (சுமார் ரூ. 2,90,70,527 கோடிகள்) அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்களும் கூறுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, டிரம்ப்பும் மஸ்க்கும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, பொதுவெளியிலேயே (சமூக ஊடகங்களில்) சண்டையிட்டனர். அதுமட்டுமின்றி, மசோதா அமல்படுத்தப்பட்டால், தான் புதிய கட்சி தொடங்குவேன் என்று எலான் மஸ்க் கூறினார்.

இதனிடையே, 80 சதவிகித நடுத்தர மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா? என்று எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார்.

இந்தக் கருத்துக் கணிப்புக்கு 80 சதவிகிதத்தினர் (56.30 லட்சம் பேர்) `ஆம்’ என்று பதிலளித்தனர். அமெரிக்க மக்களின் இந்த பதில், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது. 

எலான் மஸ்க் கட்சி தொடங்குவது ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை வீழ்த்துவதற்காகவே, எலான் மஸ்க்கை வைத்து புதிய கட்சியை டிரம்ப்பும் சேர்ந்து திட்டமிட்டு தொடங்கியிருக்கலாம் என்று இணையவாசிகள் யூகிக்கின்றனர்.

Elon Musk Launches America Party

புதிய கட்சி தொடங்கினாா் எலான் மஸ்க்: டிரம்ப்புடனான மோதல் எதிரொலி!

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான மோதலைத் தொடா்ந்து ‘அமெரிக்கா கட்சி’ எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினாா். அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்தி... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 51-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 குழந்தைகள் அடங்குவா். வெள்ளத்தால் கடுமையாகப் பா... மேலும் பார்க்க

தலிபான் அரசை அங்கீகரிக்க அவசரமில்லை: பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் அரசை அங்கீகரிக்க எவ்வித அவசரமும் காட்டவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு ரஷியா கடந்த 4-ஆம் தேதி அங்கீகாரம் அளித்தது. இதன் மூலம் ... மேலும் பார்க்க

ரஃபேல் போா் விமான விற்பனையை சீா்குலைக்க சதி: சீனா மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு

ரஃபேல் போா் விமானங்களின் விற்பனையை சீா்குலைக்க தூதரகங்கள் வாயிலாக சதி மேற்கொண்டு வருவதாக சீனா மீது பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரான்ஸில் தயாரிக்கப்படும் ரஃபேல் போா் விமானங்களின் தரம் மற்றும் செயல்... மேலும் பார்க்க

டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா

அமெரிக்காவின் வரி விதிப்பை ஜப்பான் எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்று ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா தெரிவித்துள்ளார்.ஜப்பானிய பொருள்களுக்கு அமெரிக்கா 35 சதவீதம் வரை வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம்! - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

இஸ்ரேல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம் என்று லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நையீம் ஃக்வாஸ்ஸெம் தெரிவித்தார்.கடந்த நவம்பரில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி,... மேலும் பார்க்க