செய்திகள் :

டிரம்ப் வரியால் சூரத்தில் வைர ஏற்றுமதி சரிவு!

post image

நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் 50 சதவீத வரி விதிப்பினால், குஜராத் மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி மற்றும் கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியால் நாட்டின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில், குஜராத் மாநிலம் சூரத், வைர நகரமாக மின்னிக் கொண்டிருந்த நிலையில், புதிதாக ஏற்றுமதி ஆர்டர்கள் எதுவும் வராமல் பொலிவிழந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வந்த வைர ஏற்றுமதி ஆர்டர்களும், டிரம்பின் அறிவிப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வை தொழிற்சாலைகள் தெரிவித்துள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னமும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், ஆண்டின் மொத்த வைர ஏற்றுமதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பாதிக்கும் மேல் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால், ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்கா இறக்குமதி செய்த வைரத்தில் 68 சதவீதம் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையே மதிப்பில் எடுத்துக் கொண்டால் 42 சதவீதம். அடுத்த இடத்தில் இஸ்ரேல் இருக்கிறது. இங்கிருந்து 28 சதவீத மதிப்பு கொண்ட வைரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரேலுக்கு வெறும் 19 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பதால், இந்த நாட்டுடன் இந்திய வைர நிறுவனங்கள் போட்டியிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஒரு சில ஆண்டுகளாக, இந்தியாவுக்கு வரும் வைர ஆர்டர்கள் கால் பங்குக்கும் மேல் குறைந்துவிட்டதாகவும் அதனால், உற்பத்தி 30 முதல் 35 சதவீதம் குறைந்துவிட்டாகவும் புதிய வரி விதிப்பினால், வைர ஏற்றுமதி நிறுவனங்களே சரிந்துவிடும் என்றும் வைர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை காத்திருக்கப் போவதாகவும், தங்களிடம் வைரத்தை வாங்கும் அமெரிக்க நிறுவனங்களிடம் பேசி, அவர்கள் வரி விதிப்பில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படும். அவர்கள் ஒப்புக்கொண்டால் ஓரளவுக்கு சமாளித்துவிடலாம். இந்த கடினமான காலத்தில்தான், வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையிலான உறவுக்கு பலப்பரீட்சை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!

இந்திய தேர்தல் ஆணையத்தை ‘இந்திய தேர்தல் திருடன்!’ என்று ஆர்ஜேடி கட்சி எம்.பி. சஞ்சய் யாதவ் விமர்சித்துள்ளார்.பிகாரில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக பிரசாரம்: காங்கிரஸ் ஆலோசனை!

வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றும் தேர்தல் மோசடிக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று (ஆக. 12) ஆலோசனையில் ஈடுபட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைம... மேலும் பார்க்க

உலகின் டாப்-20 கோடீஸ்வரர்கள்: அதானிக்கு மீண்டும் இடம்!

உலகின் முதல் 20 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி மீண்டும் இடம்பிடித்துள்ளார்.ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, அதானியின் சொத்துமதிப்பு 79.7 பில்லியன் டாலராக உள்ளது. பங்குச்சந்தையி... மேலும் பார்க்க

திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் திருப்பதி மலைப் பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி திருமலை கோயிலுக்குச் செல்லும் வாகனங்கள் சோதனைக்குப் ப... மேலும் பார்க்க

மூக்கு துவாரம் வழியாக மூளைக் கட்டி அகற்றம்! மாற்றி யோசித்த மருத்துவர்கள்

சண்டிகர்: உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 2 வயது குழந்தையின் மூளையில் வளர்ந்திருந்த கட்டிய மூக்குத் துவாரம் வழியாகவே அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.மூளையில் வளர்ந்திருந்த 4.5 செ.மீ... மேலும் பார்க்க

2017-க்குப் பின்... சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு!

கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 1.55 சதவீதமாகக் குறைந்தது.காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்ததாலும், பரவலான பருவமழையின் தாக்கத்தாலும... மேலும் பார்க்க