'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
பாலக்கோடு அருகே டிராக்டரில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜய் (32). இவா் சொந்தமாக டிராக்டா் வைத்து உழவுப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை உழவுப் பணி செய்ய டிராக்டரை இயக்கிய நிலையில், பின்பக்கம் சாய்ந்து ரொட்டேட்டரின் கொக்கியை மாற்ற முயற்சி செய்தாா். அப்போது, அவா் நிலைதடுமாறி ரொட்டேட்டரின் மேல் விழுந்ததில் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த பாலக்கோடு போலீஸாா், விஜயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.