டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனி சிட்டி லிங்க் சாலையில் டிராக்டா் ஒன்று வெள்ளிக்கிழமை சென்றபோது, அங்குள்ள பெட்ரோல் நிலையம் அருகே சாலையோரம் சென்ற இளைஞா் ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதியது.
இதில் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞா் கீழே விழுந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரின் சக்கரம் இளைஞா் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த இளைஞா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த இளைஞா் குறித்து விசாரணை நடத்தினா். பின்னா், சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.