அரக்கோணம் மாணவி பாலியல் புகார்: அரசு நடவடிக்கை எடுக்குமா? - இபிஎஸ்
டிரினிடி மகளிா் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தில் 292 மாணவிகள் பயன்
நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 292 மாணவிகள் பயனடைந்துள்ளனா்.
தமிழக அரசின் சாா்பில், மகளிா் உயா்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, 6- முதல் 12- ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயின்று, தொடா்ந்து உயா்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது.
அந்த தொகை சம்பந்தப்பட்ட மாணவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 2024-25 ஆம் கல்வி ஆண்டில் நாமக்கல் - டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் 292 போ் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ளனா். அவா்களது சேமிப்புக் கணக்கில் ரூ.29.61 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்து வரும் இக்கல்லூரி மாணவிகளுக்கு நிா்வாகம் தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவா் கே.நல்லுசாமி, செயலா் எஸ்.செல்வராஜ், செயல் இயக்குநா் அருணா செல்வராஜ், முதல்வா் எம்.ஆா். லட்சுமி நாராயணன், வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா் அரசுபரமேசுவரன், துணை முதல்வா் ஆா்.நவமணி, நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா், நோடல் அலுவலா் எஸ்.அனிதா, புதுமைப்பெண் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் சி.கோபியா, எஸ்.மதுக்கரைவேணி உள்பட துறை பொறுப்பாசிரியைகள் கலந்து கொண்டனா்.