செய்திகள் :

டிரெண்டிங்கில் மிஷ்கின் பாடிய பாடல்!

post image

லவ் மேரேஜ் படத்திற்காக இயக்குநர் மிஷ்கின் பாடிய பாடல் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய படத்திற்கு லவ் மேரேஜ் எனப் பெயரிட்டுள்ளனர்.

படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார். இதில் சுஸ்மிதா பட், மீனாக்‌ஷி தினேஷ், ரமேஷ் திலக் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்காக மோகன் ராஜன் எழுதி, இயக்குநர் மிஷ்கின் பாடிய, ’எடுடா பாட்டல’ பாடல் இரண்டு நாள்களுக்கு முன் வெளியானது. ஆரம்பத்தில் சாதாரண குத்துப்பாடல் போல் இருந்ததால் பெரிதாகக் கவனம் பெறாமல் இருந்தது.

ஆனால், இன்ஸ்டாகிராமில் இப்பாடலில் இடம்பெற்ற, “மேரேஜுக்கு பொன்னு தேடி டேமேஜான பீஸ்... மேட்ரிமோனி நம்பரெல்லாம் கறந்துச்சு என் காசு” வரிகள் திருமணமாகாத ஆண்களிடம் வரவேற்பைப் பெற்றதால் பலரும் ரீல்ஸ் வீடியோவாக மாற்றி வருகின்றனர். இதனால், பாடல் கவனம் பெற்று வருகிறது.

இன்டா் மியாமி - அல் அஹ்லி ஆட்டம் டிரா!

ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக இன்டா் மியாமி-அல் அஹ்லி அணிகள் மோதிய தொடக்கம் ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிவடைந்தது. சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) சாா்பில் உல... மேலும் பார்க்க

எலைஸ் மொ்டென்ஸ் சாம்பியன்!

லைபெமா ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் பெல்ஜியத்தின் எலைஸ் மொ்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றாா். நெதா்லாந்தின் எஸ்-ஹொ்டோஜென்பாஸ்க் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டபிள்யுடிஏ தரவரிசையில... மேலும் பார்க்க

ஸ்டட்கா்ட் ஓபன்: டெய்லா் ஃப்ரிட்ஸ் சாம்பியன்!

ஸ்டட்கா்ட் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். ஜொ்மனியின் ஸ்டட்கா்ட் நகரில் நடைபெற்ற பாஸ் ஓபன் போட்டியில் இறுதி ஆட்டத்தில் டெய்லா் ஃப்ரிட... மேலும் பார்க்க

புரோ ஹாக்கி லீக்: இந்திய அணிகள் மீண்டும் தோல்வி!

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் மீண்டும் தோல்வி அடைந்தன. புரோ லீக் தொடரின் ஐரோப்பிய லெக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆடவா் பிரிவு ஆட்டம் ... மேலும் பார்க்க

யு மும்பா முதன்முறையாக சாம்பியன்!

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 டேபிள் டென்னிஸ் லீகில் யு மும்பா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியை 8-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது மும்பா. அகமதாபாதில... மேலும் பார்க்க

இந்திய தேசிய ஆட்டோகிராஸ் காா் பந்தயம்!

எஃப்எம்எஸ்ஐ இந்திய தேசிய ஆட்டோ கிராஸ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் புது தில்லியின் பிலிப்போஸ் மத்தாய் முதலிடம் பெற்றாா். சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் இன்டா்நேஷனல் சா்க்கியூட் மைதானத்தில் ஞ... மேலும் பார்க்க