ஆசிய கோப்பை: சூரியகுமார் தலைமையில் இந்திய அணி! துணை கேப்டன் ஷுப்மன் கில்!
``டி.ஆர்.பாலு பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கியவர்!'' - TRB-ன் மனைவி இறப்புக்கு ஸ்டாலின் இரங்கல்
நாடாளுமன்றத்தின் திமுக தலைவர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு இன்று காலை காலமானார்.
டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். இவருடன் துர்கா ஸ்டாலினும் சென்றிருக்கிறார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
"கழகப் பொருளாளரும் - முன்னாள் ஒன்றிய அமைச்சரும் - என் ஆருயிர் நண்பருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி திருமிகு. ரேணுகாதேவி பாலு அவர்களது மறைவால் வேதனையடைந்தேன்.
நண்பர் டி.ஆர்.பாலு அவர்களும் - தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களும் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!
எனது நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்து, அவர்களது கரம் பற்றி ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
கழகப் பொருளாளரும் - முன்னாள் ஒன்றிய அமைச்சரும் - என் ஆருயிர் நண்பருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி திருமிகு. ரேணுகாதேவி பாலு அவர்களது மறைவால் வேதனையடைந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) August 19, 2025
நண்பர் டி.ஆர்.பாலு அவர்களும் - தம்பி @TRBRajaa அவர்களும் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது… pic.twitter.com/sHLpU3MMr5