டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாக ஜெய்ஸ்வால் செய்ய வேண்டியதென்ன?
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் தரமான தொடக்கத்தை அளித்து வருகிறார்கள். அதனால், 23 வயதாகும் ஜெய்ஸ்வால் டெஸ்ட்டில் இடம் பிடித்தாலும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா, இலங்கை நடத்துகின்றன. இந்தப் போட்டிகள் அடுத்தாண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறும்.
ஜெய்ஸ்வால் 23 டி20 சர்வதேச போட்டிகளில் 723 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் குறித்து அவரது பயிற்சியாளர் ஜ்வாலா சிங் கூறியதாவது:
இந்தியாவுக்காக ஜெய்ஸ்வால் அதிகமாக விளையாடியுள்ளார். நல்ல ஸ்டிரைக் ரேட்டுடன் அதிகமான அரைசதங்கள் அடித்துள்ளார். ஆனால், கடைசி 2-3 தொடர்களில் அவர் உட்காரவைக்கப்பட்டார்.
இந்த ஐபிஎல் சீசன் அவருக்கு டி20 உலகக் கோப்பைக்கான வாய்ப்பை வழங்கும். ஏனெனில் இதில் அதிக போட்டிகள், அதிக அழுத்தம் மிகுந்த போட்டிகளும் இருக்கின்றன.
இந்திய கிரிக்கெட்டினை பொருத்தவரை ஐபிஎல்தான் முக்கியமானதாக இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் அனைத்துமே கவனிக்கப்படுகின்றன.
2023இல் ஜெய்ஸ்வால் ஐபிஎல் செயல்பாடுகளை வைத்தே தேர்ந்தெடுகப்பட்டார். இந்த ஐபிஎல்லில் நன்றாக விளையாடி ரன்களை குவித்தால் ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்றார்.