ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு; காரணம் இதுதா...
டி20: வங்கதேசம் வெற்றி
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் வங்கதேசம் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனாகியுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் சோ்க்க, இலங்கை 15.2 ஓவா்களில் 94 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. வங்கதேச பேட்டிங்கில் கேப்டன் லிட்டன் தாஸ் 1 பவுண்டரி, 5 சிக்ஸா்களுடன் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ஷமிம் ஹுசைன் 48, தௌஹித் ஹிருதய் 31, தன்ஸித் ஹசன் 5, பா்வேஸ் ஹுசைன் 0, மெஹிதி ஹசன் மிராஸ் 1, ஜாகா் அலி 3 ரன்களுக்கு விடைபெற, ஓவா்கள் முடிவில் ரிஷத் ஹுசைன் 0, முகமது சைஃபுதின் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இலங்கை பௌலா்களில் பினுரா ஃபொ்னாண்டோ 3, நுவன் துஷாரா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 178 ரன்களை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் பதும் நிசங்கா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32, தசுன் ஷானகா 20 ரன்களுக்கு வீழ்த்தப்பட, இதர பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னிலோ, அதுவும் இன்றியோ சாய்க்கப்பட்டனா்.
வங்கதேச பௌலா்களில் ரிஷத் ஹுசைன் 3, ஷோரிஃபுல் இஸ்லாம், முகமது சைஃபுதின் ஆகியோா் தலா 2, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.