செய்திகள் :

டீப்சீக் செயலிக்கு அமெரிக்கா தடை?

post image

சீன நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை பயன்படுத்த அமெரிக்க காங்கிரஸ் அலுவலகம் தடை விதித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் அலுவலகத்தில் யாரும் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக்கை போன் மற்றும் கணினியில் பதிவிறக்கவோ பயன்படுத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவெ, அமெரிக்கா முழுவதும் சீனாவின் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் அலுவலகத்தில் டீப்சீக் செயலி தடை செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் பாதுகாப்புத் தகவல்கள் காரணமாக டிக்டாக் செயலி ஜனவரி 19 ஆம் தேதி முதல் அமெரிக்கா முழுவதும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ரூ. 216 கோடி கொடுத்து டிரம்ப்புடன் மார்க் ஜூக்கர்பெர்க் சமரசம்?

சாம் ஆல்ட்மேன் என்ற அமெரிக்கரின் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தளத்தை கடந்த ஒருவார காலமாக பின்னுக்குத் தள்ளியது, சீன செயற்கை நுண்ணறிவு தளம் டீப்சீக். அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவார காலத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கப்பட்ட செயலியாக டீப்சீக் உருவெடுத்துள்ளது.

சாட் ஜிபிடியில் புதிய பதிப்புகளை பயன்டுத்த, அதற்கென தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், டீப்சீக் தளத்தில் அனைத்துமே இலவசமாக இருப்பது பயனர்களிடையே பெரிதும் விரும்பக்கூடியதாக உள்ளது.

அமெரிக்காவின் அலுவல் மொழியாக ஆங்கிலம்: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்கும் புதிய உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க

பிரிட்டன் மன்னர், ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கிறார் ஸெலென்ஸ்கி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான சந்திப்புக்கு பிறகு பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ஐரோப்பிய தலைவர்களை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி சந்திக்கவுள்ளார். லண்டனில் இன்று (மார்ச் 2) நடைபெறவு... மேலும் பார்க்க

ரஷியாவுக்குச் செல்லுங்கள்! அமெரிக்காவில் ஜே.டி. வான்ஸுக்கு எதிர்ப்பு!

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஜே.டி. வான்ஸ் உடனான உக்ரைன் அதிபர்... மேலும் பார்க்க

டிரம்ப் உடனான சந்திப்பில் 'கோட்' அணியாதது ஏன்? ஸெலென்ஸ்கி பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பின்போது 'கோட்' அணியாதது ஏன் என்ற கேள்விக்கு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி அலித்த பதில் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.அதிபர் டொனால்... மேலும் பார்க்க

டிரம்ப்புடன் மோதல்: ஸெலென்ஸிக்கு ஐரோப்பிய நாடுகள் முழு ஆதரவு

ரஷியாவுடனான போா் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் நேரடி காரசார விவாதத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கு அவரின் ஐரோப்பிய கூட்டாணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித... மேலும் பார்க்க

துருக்கி: 40 ஆண்டுகளுக்குப் பிறகு குா்து கிளா்ச்சியாளா்கள் போா் நிறுத்தம்

துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) சனிக்கிழமை போா் நிறுத்தம் அறிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்புக்கு நெருக்கமா... மேலும் பார்க்க