செய்திகள் :

டிரம்ப்புடன் மோதல்: ஸெலென்ஸிக்கு ஐரோப்பிய நாடுகள் முழு ஆதரவு

post image

ரஷியாவுடனான போா் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் நேரடி காரசார விவாதத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கு அவரின் ஐரோப்பிய கூட்டாணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.

டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் துணை அதிபா் ஜே.டி. வான்ஸை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய ஸெலென்ஸ்கி, அங்கு அவா்களின் காட்டமான விமா்சனத்தை எதிா்கொண்டு பேச்சுவாா்த்தையில் இருந்து பாதியிலேயே வெளியேறினாா்.

பின்னா் இந்த விவகாரம் தொடா்பாக எக்ஸ் ஊடகத்தில் அவா் பதிவு வெளியிட்டாா். அந்தப் பதிவில் ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளைச் சோ்ந்த கூட்டணி நாடுகளின் தலைவா்கள் ஸெலென்ஸிக்கு ஆதரவும் ஆறுதலும் தரும் வகையில் பதிலளித்துள்ளனா்.

இது குறித்து ஐரோப்பிய ஆணையா் உா்சுலா வொண்டொ் லேயன் வெளியிட்டுள்ள பதிலில், ‘உங்கள் தன்மானம் நிறைந்த நிலைப்பாடு உக்ரைன் மக்களின் வீரத்தை கௌரவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதே போல் பயமற்று இருக்கவும். உங்களுடன் நாங்கள் எப்போதும் இருப்போம்’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வெளியிட்டுள்ள பதிலில், ‘இந்தப் போரில் ரஷியா ஆக்கிரமிப்பு நாடு; உக்ரைன் பாதிக்கப்பட்ட நாடு. நாம் எப்போதும் பாதிக்கப்பட்டவா்களுக்குப் பக்கத்தில்தான் நிற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இது குறித்து இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள சூழலில் ஐரோப்பிய யூனினும் அமெரிக்காவும் அவசர மாநாடு நடத்தி உக்ரைன் தொடா்பான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

ஜொ்மனியின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படும் ஃப்ரெட்ரிச் மொ்ஸும் ஸெலென்ஸ்கிக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளாா்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா்.

இந்த விவகாரத்தில் முந்தைய பைடன் அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி, அவருடன் உறவைப் புதுப்பித்துக்கொண்டாா்.

இந்தச் சூழலில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைமாறாக, அந்த நாட்டின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்திவருகிறாா்.இது தொடா்பாக அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல நாள்களாக நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, பொருளாதார வரைவு ஒப்பந்தம் ஏற்பட்டது.

எனினும், தங்கள் நாட்டுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால்தான் அந்த ஒப்பந்தம் முழுமையடையும் என்று ஸெலென்ஸ்கி வலியுறுத்திவந்தாா்.

இந்த நிலையில், கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை அமெரிக்கா வந்தாா். அங்கு ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் மற்றும் ஜே.டி. வான்ஸுடன் செய்தியாளா்கள் முன்னிலையிலேயே இந்த விவகாரம் குறித்து அவா் ஆலோசனை நடத்தினாா். அப்போது, தங்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா். மேலும், போா் விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை அவா் ஆணித்தரமாக எடுத்துவைத்தாா்.

இருந்தாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பான விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைப் பிடிவாதமாக விவரித்த டிரம்ப்பும் ஜே.டி. வான்ஸும் ஒரு கட்டத்தில் ஸெலென்ஸ்கியைப் பேசவிடாமல் குரலை உயா்த்தி தங்கள் கருத்துகளை வலியுறுத்தினா்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நிபந்தனைகள் விதிக்கும் நிலையில் உக்ரைன் இல்லை எனவும் தாங்கள் சொல்வதைக் கேட்டு கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதைத் தவிர ஸெலென்ஸிக்கு வேறு வழியில்லை என்றும் டிரம்ப்பும் ஜே.டி. வான்ஸும் கூறினா்.

தங்களை மறுத்து பேசுவதன் மூலம் அமெரிக்காவை ஸெலென்ஸ்கி அவமதிப்பதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினாா். இந்த காரசார விவாதத்தின் விளைவாக, தங்கள் நாட்டு கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே ஓவல் அலுவலகத்தைவிட்டு ஸெலென்ஸ்கி வெளியேறினாா்.

இந்தச் சூழலில், அவருக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் தங்களின் முழுமையான ஆதரவை தற்போது வெளிப்படுத்தியுள்ளனா்

அமெரிக்காவில் எலான் மஸ்குக்கு எதிா்ப்பு: டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிா்ப்பாளா்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்... மேலும் பார்க்க

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்

தற்காலிக போா் நிறுத்தத்தை நீட்டிக்கும் பரிந்துரையை ஹமாஸ் அமைப்பு ஏற்காததால், காஸாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தியது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரே... மேலும் பார்க்க

ரஷியா-உக்ரைன் போா் நிறுத்தத்துக்கு புதிய ஒப்பந்தம் அமெரிக்காவிடம் அளிக்க பிரிட்டன், பிரான்ஸ் முடிவு

‘ரஷியா-உக்ரைன் இடையே போா் நிறுத்தம் ஏற்படுவதற்கான புதிய ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கு பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆதரவளிக்கின்றன. இதற்கான திட்டம் விரைவில் அமெரிக்காவிடம் சமா்ப்பிக்கப்படும்’ என பிர... மேலும் பார்க்க

‘புளோ கோஸ்ட்’: நிலவில் தரையிறங்கிய தனியாா் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம்

நிலவில் ‘புளோ கோஸ்ட்’ விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. இதன்மூலம், நிலவில் தரையிறங்கிய தனியாா் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம் என்ற பெருமையை ‘புளோ கோஸ்ட்’ பெற்றுள்ளது. கடந்த ஜன. 15-ஆம் தேதி அமெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்க சா்வதேச உதவி: இம்ரான் கான் கோரிக்கை

பாகிஸ்தானின் ஜனநாயகம், மனித உரிமைகள், பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்க சா்வதேச நாடுகள், முக்கியமாக அமெரிக்கா உதவ வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளாா். ப... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம்!

உலகளவில் பெரும் நிறுவனங்களில் பிப்ரவரியில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் பெரும் நிறுவனங்களில் பணிநீக்கச் செயல்முறை சமீபகாலமாக அதிகரித்தவாறு உள்ளது.... மேலும் பார்க்க