பிப்ரவரியில் தேர்தலா? தில்லி பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!
டூரிஸ்ட் ஃபேமிலி படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி, கருடன், நந்தன் என சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் தொடர்ச்சியாக வெளியான திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்த நிலையில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் தற்போது நடித்துள்ளார்.
இதையும் படிக்க : 12 ஆண்டுகளுக்குப் பிறகு... மதகஜராஜா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கும் நிலையில், குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், சசிகுமார்-சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, சசிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் வருகின்ற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.