செய்திகள் :

டெல்லி: தீ விபத்தில் தப்பிக்க, பால்கனியில் இருந்து குதித்த 3 பேர் உயிரிழப்பு

post image

டெல்லி துவாரகைப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் எட்டாம் மற்றும் ஒன்பதாம் மாடியில் நேற்று காலை 10 மணியளவில் தீப்பிடித்திருக்கிறது. தீயும், புகையும் மிக வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

அதிலிருந்து தப்பிக்க அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மற்றும் சிறுமி பால்கனியில் இருந்து குதித்துள்ளனர். இவர்களுடைய தந்தை யஷ் யாதவ்வும் (35 வயது) பால்கானியில் குதித்துள்ளார். இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றப்போது, ஏற்கெனவே இவர்கள் மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தீ விபத்து - டெல்லி
தீ விபத்து - டெல்லி

யாதவின் மனைவி மற்றும் மூத்த மகன் மட்டும் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளனர். இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த தீ விபத்து பெரிதும் பரவாமல் இருக்க, உடனடியாக அங்கே மின்சாரம் மற்றும் கியாஸ் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

எட்டாம் மற்றும் ஒன்பதாம் மாடியில் தீவிபத்து ஏற்பட்டிருந்ததால், ஸ்கை லிஃப்ட் மூலம் தீயணைப்புத் துறை மக்களை மீட்டுள்ளனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம் - சாத்தூர் அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் அதிகாலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள 8 அறைகள் வெட... மேலும் பார்க்க

தெலங்கானா தொழிற்சாலை விபத்தில் 34 பேர் உயிரிழப்பு; விபத்திற்கு காரணம் என்ன?

நேற்று காலை, 8.15 - 9.35 மணியளவில், தெலங்கானா, சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் இருந்த ரியாக்டர் வெடித்தது தான் இந்த விபத்திற்... மேலும் பார்க்க

Plane crash: ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதியா? - மத்திய இணையமைச்சர் முரளிதர் சொல்வதென்ன?

கடந்த மாதம் அகமதாபாத்தில் 274 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து, நாசவேலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் த... மேலும் பார்க்க

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் மூவர் பலி; மன்னிப்பு கேட்ட ஒடிஷா முதல்வர்

இன்று (29.06.2025) ஒடிஷாவில் நடைபெற்ற பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட நெருக்கடியால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். பசந்தி சாஹு, பிரேமகாந்த் மொகந்தி மற்றும் பிரவதி தாஸ் ... மேலும் பார்க்க

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்; கதவு திறந்து நோயாளியுடன் நடுரோட்டில் விழுந்த ஸ்ட்ரெச்சர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். குன்னூர் நகரின் நுழைவு... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: மலையிலிருந்து தவறி ஆற்றில் விழுந்த பஸ்; 10 பேர் மாயம், 3 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலையில் ஏராளமான கோயில்கள் இருக்கிறது. இக்கோயில்களுக்கு தினமும் வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். மலைப்பாதை மிகவும் குறுகலாகவும், வளைவுகள் நிற... மேலும் பார்க்க