செய்திகள் :

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

post image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஜூலை 30) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் கிரைக் எர்வின் 39 ரன்களும், டஃபாட்ஸ்வா சிகா 30 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்

ஜிம்பாப்வே அணி 149 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 41 ரன்கள் எடுத்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 34 ரன்கள் எடுத்தும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 170 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின் களமிறங்கிய வீரர்களில் சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 119 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். நாதன் ஸ்மித் 22 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 19 ரன்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முஸராபானி 3 விக்கெட்டுகளையும், தனாகா சிவங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சிக்கந்தர் ராஸா, நியாம்ஹுரி, சீன் வில்லியம்ஸ், வின்செண்ட் மசகேசா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ஜிம்பாப்வே தடுமாற்றம்

முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்ததன் மூலம், நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 158 ரன்கள் முன்னிலை பெற்றது.

158 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்துள்ளது. நிக் வெல்ச் 2 ரன்களுடனும், வின்செண்ட் மசகேசா 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஜிம்பாப்வே அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 127 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்த ஷுப்மன் கில்!

New Zealand were bowled out for 307 in the first innings of the first Test against Zimbabwe.

இங்கிலாந்து தொடருக்காக ஒவ்வொரு நிமிடமும் கடினமாக உழைத்த கே.எல்.ராகுல்: அபிஷேக் நாயர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியின் கே.எல்.ராகுல் ஐபிஎல் நிறைவடைந்த பிறகு கடிமனாக உழைத்ததாக இந்திய அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்று... மேலும் பார்க்க

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அணிக்கு திரும்புவதால் பேட்டிங் குறைபாடுகள் நீங்கும் என சிஎஸ்கேவின் தற்காலிக கேப்டன் எம்.எஸ். தோனி பேட்டியளித்துள்ளார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் டாப் 1... மேலும் பார்க்க

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி தனது உடல்நலம் விளையாட இன்னும் தகுதியாக இல்லை எனக் கூறியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 44 வயதாகும் தோனிக்க... மேலும் பார்க்க

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

இந்திய வீரர் முகமது சிராஜ் வெளிநாட்டில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்க கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் திடலில் ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் டபிள்யூசிஎல் (லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் ) தொடரில் விளையாடி வருகிறார்கள்.இந்தத் ... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு - இந்தியா அபார முன்னிலை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 374 ரன்கள் முன்னிலை பெற்றது.இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப்பின், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்கள் எடுத்தது.England... மேலும் பார்க்க