சாகும்வரை சிறை போதாது! மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் மமதா அதிருப்தி
டொனால்ட் டிரம்ப் விருந்து: நீதா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ்!
அமெரிக்க அதிபரா பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
எந்தவொரு நிகழ்ச்சியில் நீதா அம்பானி கலந்து கொண்டாலும், அவரைப் பற்றி குறிப்பிட்டு சில தகவல்கள் வரும். அதில், அவரது ஆடையலங்காரம் இடம்பெறாமல் இருக்காது. அவரது ஆடைத் தேர்வும், அணிகலன் தேர்வும், அவ்வளவு புகழ்பெற்றது.
அந்த வகையில்தான், அமெரிக்க அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதா அம்பானி அணிந்திருந்த கறுப்பு நிற புடவையில் தங்க ஜரிகையிலான பட்டுப்புடவையும், மரகத கற்களால் வடிவமைக்கப்பட்ட நெக்லஸும், விருந்தில் பங்கேற்ற பல முக்கிய விருந்தினர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று (ஜனவரி 20) பதவியேற்க உள்ளார். துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸுடன் தனது இரண்டாவது அலுவல்பூர்வ பதவிக்காலத்தை இன்றைய நாளில் தொடங்குகிறார் டிரம்ப். 1980-ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் உள்ளது போல தற்போதைய பதவியேற்பு விழாவும் கேப்பிடல் எனப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறவிருக்கிறது.