செய்திகள் :

'ட்ரம்ப் வரியால் திருப்பூரில் ரூ.3,000 கோடி ஏற்றுமதி பாதிப்பு' - முதல்வர் ஸ்டாலின்

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 50 சதவிகித வரி அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளில் 68 சதவிகிதம் திருப்பூரில் இருந்து தான் செல்கிறது.

ட்ரம்பின் வரியால், திருப்பூரில் கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி மதிப்புள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்க உள்ளது.

ட்ரம்ப் வரி விதிப்புகளை அறிவித்தப்போது...
ட்ரம்ப் வரி விதிப்புகளை அறிவித்தப்போது...

ஸ்டாலின் பதிவு

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது...

"அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பு தமிழ்நாட்டின் ஏற்றுமதிகளை மிகவும் பாதிக்கும். முக்கியமாக, ஜவுளித்துறையின் மையமான திருப்பூர் மிகவும் பாதிப்படையும்.

இதன் பாதிப்பு கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி ஆகும். இந்த வரியால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பாதிப்படையும்.

நமது தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடியாக மத்திய அரசு நிவாரணம் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா இந்தியாவிற்கு பதிலாக, தனது ஜவுளி இறக்குமதிகளில் வங்கதேசம், வியட்நாம், மெக்சிகோ, CAFTA-DR ஆகிய நாடுகளை நாடியுள்ளது.

`அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை' - மாணிக்கம் தாகூர்

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1,01,800 மதிப்புள்ள மூன்று வாகனங்கள் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,14,400 மதிப்பில் வழங்கினார். பின்னர் செய்தியாளர... மேலும் பார்க்க

ராகுல் காந்தி: `குஜராத் கட்சிகள் பெற்ற ரூ.4300 கோடி நன்கொடை என்ன ஆனது'- தேர்தல் ஆணையம் விசாரிக்குமா?

குஜராத் மாநிலத்தில் உள்ள 10 சிறிய முகம் தெரியாத கட்சிகள் 2019-20 மற்றும் 2023-24 கால கட்டத்தில் ரூ.4300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான ஊடக அறிக்கைகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கா... மேலும் பார்க்க

'இந்தியா நினைத்தால் நாளைக்கே 25% வரியில் இருந்து தப்பிக்க முடியும்' - ட்ரம்பின் ஆலோசகர் பேச்சு

இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவிகித வரி அமலுக்கு வந்துவிட்டது. இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அமெரிக்க தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ... மேலும் பார்க்க

`விஜய் வருகை பல அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை' - டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயல... மேலும் பார்க்க

கழுகார் : `கன்ட்ரோலில் சொத்துகள்’ - ஆளும் தரப்பிலிருந்து `சின்ன தலைவி’க்கு ஆதரவு கொடுப்பது யார்?

மனம் வெதும்பும் மீசைத் தலைவர்!“கூட்டணியில் இருந்து என்ன பயன்?”தமிழகத்தையே உலுக்கிய ஆணவப் படுகொலைக்குப் பிறகு, முதன்மையானவரைச் சந்தித்த மீசைத் தலைவர், ‘ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை’ உடனடியாக நிறைவே... மேலும் பார்க்க

‘Vote Chori’ Row : `வாக்குத் திருட்டும், ஜனநாயக பேராபத்தும்!' - கான்ஸ்டன்டைன் ரவிந்திரன் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)திமுக செய்தித் தொடர்பு செயலாளர், ஆசிரியர்,The... மேலும் பார்க்க