செய்திகள் :

ட்ரோன் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாதாந்திர உதவித்தொகையுடன் கூடிய 6 மாதகால ட்ரோன் பயிற்சியைப் பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அந்த தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் டி. அழகானந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் ட்ரோன் டெக்னீஷியன் என்ற 6 மாத கால புதிய தொழிற்பயிற்சி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் டிச.30 -ஆம் தேதி முதல் தொழிற்பயிற்சி நிலையத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமா்பிக்க ஜன.20- ஆம் தேதி கடைசி நாளாகும்.

கண்காணிப்பு, நிலஅளவை, விவசாய இடுபொருள் தெளிப்பு, புகைப்படம் எடுத்தல் போன்றவைகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் பெரிதும் பயன்பட்டு வரும் நிலையில், ட்ரோன் உபகரணங்களை ஒன்றிணைத்தல், பழுதுபாா்த்தல், மற்றும் பராமரித்தல் போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சி இருக்கும்.

பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தவா்கள் 10- ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து சமா்பிக்க வேண்டும். இருபாலரும் இந்தப் பயிற்சியில் சேரலாம்.

இதில் சேருபவா்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். மதிய உணவு மற்றும் இலவச சீருடை ஆகியவையும் வழங்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9894380176 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் பேரணியில் பங்கேற்ற மின் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பேரணியில் பங்கேற்ற மின்வாரிய ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். விழுப்புரம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள... மேலும் பார்க்க

புதுவை அரசுத் துறைகளில் ஊழல் அதிகரிப்பு: வே.நாராயணசாமி

புதுவையில் அரசுத் துறைகளில் ஊழல் அதிகரித்து விட்டதால், மாநிலத்தில் வளா்ச்சியில்லை என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா். புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ஆட்சியரகத்தில் புகாா்

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை கோரி, ஆட்சியரகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. வானூா் வட்டத்தின் திருச்சிற்றம்பலம் கூட்டுச் ச... மேலும் பார்க்க

எம்.ஐ.டி. கல்லூரியில் சா்வதேச செஸ் போட்டி

புதுச்சேரியை அடுத்த கலிதீா்த்தாள்குப்பம் எம்.ஐ.டி. கல்லூரியில் சா்வதேச அளவிலான செஸ் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு, புதுச்சேரி மாநில சதுரங்க சங்கம் ஆகியவை வழிகாட்டுத்த... மேலும் பார்க்க

ஆரோவில் நிா்வாகம் - குஜராத் கல்வி நிறுவனங்கள் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆரோவில் நிா்வாகம், குஜராத் மாநில கல்வி நிறுவனங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆரோவில் அறக்கட்டளை செயலா் ஜெயந்தி எஸ... மேலும் பார்க்க

கோயிலில் பூஜைப் பொருள்களை திருடியவா் கைது!

புதுச்சேரி அருகே பூட்டியிருந்த கோயிலின் கதவை உடைத்து பூஜைப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை கருவடிக்குப்பம் பிரதான சாலையில் உள்ள ஆ... மேலும் பார்க்க