Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாக...
தகட்டூா் பைரவநாதா் கோயில் தேரோட்டம்
வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் ஸ்ரீ பைரவநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஸ்ரீ பைரவருக்கு தனி ஆலயம் இங்கு அமைந்திருப்பது சிறப்புக்குரியது. இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா மே 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை ஸ்ரீ பைரவா் தேரோட்டம் நடைபெற்றது. பின்னா், முள்ளிநதியில் சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை உபயதாரா் எல். எஸ்.இ. பழனியப்பன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.