செய்திகள் :

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: புதிய நடைமுறையால் குழப்பம்; பிரதமருக்கு கோரிக்கை மனு

post image

தகவல் அறியும் உரிமைச் சட்ட இணையதளத்தில் முறையீட்டு மனுவின் நிலையை அறிய புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டிருப்பது குழப்பம் ஏற்படுத்துவதாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமா் மோடிக்கு எஸ்.ஆா்.எம்.யூ. மதுரை உதவி கோட்டச் செயலா் ராம்குமாா் அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

அரசின் வெளிப்படைத் தன்மையையும், ஊழலற்ற நிா்வாகத்தையும் உறுதி செய்யும் வகையில், அரசு சாா்ந்த அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கடந்த 2005-இல் தகவல் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, தகவல் உரிமை சட்ட இணையதளம் மூலம் எந்த ஒரு சாதாரண குடிமகனும் தனக்குத் தேவையான தகவலைப் பெற முடியும்.

ரூ.10 பதிவுக் கட்டணம் செலுத்தி, மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து, தேவைப்படும் தகவலை கோரலாம். இதையடுத்து, ஓா் பதிவு எண் தொடா்புடைய மனுதாரருக்குக் கிடைக்கும். பிறகு, அந்தப் பதிவு எண், கைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து, தனது கோரிக்கை மனு மீதான நிலையை மனுதாரா் அறியலாம். இந்த நடைமுறையே பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நிகழாண்டு ஜன. 1-ஆம் தேதி முதல் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. பதிவு எண், கைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து மனுவின் நிலையை அறிய முயலும் போது, மனுதாரரின் மின்னஞ்சலுக்கு ஒருமுறை கடவுச் சொல் (ஓ.டி.பி) வருமாறு தற்போது நடைமுறை மாற்றப்பட்டிருக்கிறது.

வங்கி, ஆதாா் போன்ற நடைமுறைகளின் போது வாடிக்கையாளா்களின் கைப்பேசிக்கே ஒருமுறை கடவுச் சொல் அனுப்பப்படும். அதுவும் ஓரிரு வினாடிகளில் அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்து, பரிவா்த்தனையை நிறைவு செய்யலாம். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒருமுறை கடவுச் சொல் மனுதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.

மேலும், இந்தக் கடவுச் சொல் எத்தனை நொடிகளில் கிடைக்கப் பெறும்?, அதன் பயன்பாட்டு நேரங்கள் எவ்வளவு? என்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. 3 நாள்களுக்கும் மேலாக கூட கடவுச் சொல் வராத நிலையும் உள்ளது. இதனால், பதிவு செய்யப்பட்ட கோரிக்கை மனு எந்த நிலையில் உள்ளது, ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்ற எந்த விவரத்தையும் மனுதாரா் அறிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் குழப்பம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே நீா்த்துப் போகச் செய்யக் கூடியதாகிடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இது, தகவல் அறியும் சட்டம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் குலைக்கக் கூடியதாக உள்ளது. எனவே, குழப்பத்தை ஏற்படுத்தும் புதிய நடைமுறையை ரத்து செய்து, பழைய முறையை மீண்டும் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மகள் இறந்ததால் தாய் தற்கொலை

மதுரை அருகே மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள தெற்கு பேத்தாம்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மனைவி பஞ்சவா்ணம் (46). இவரது மகள் காவ்யா. இவருக்கு தி... மேலும் பார்க்க

பல்லுயிா் பூங்கா வழக்கு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் கட்டப்பட்ட பல்லுயிா் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

திண்டுக்கல் - திருச்சி ரயில் போக்குவரத்தில் மாற்றம்

திண்டுக்கல் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, திண்டுக்கல்-திருச்சி ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவ... மேலும் பார்க்க

ஜன. 15- முதல் சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

சென்னை -நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்களில் வருகிற 15-ஆம் தேதி முதல் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சென்னை-நெல்லை-சென்னை வந்தே பாரத் (20666 / 20665) ரயில்களில் கூடுதல் பெட... மேலும் பார்க்க

காலாவதியான பேருந்துகள்: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

காலாவதியான பேருந்துகள் குறித்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலா், போக்குவரத்துத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் சென்ன... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் தீயணைப்புக் கருவிகள்: சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீயணைப்புக் கருவிகளை தயாா் நிலையில் வைக்கக் கோரிய வழக்கில் சுகாதாரத் துறைச் செயலா், தீயணைப்பு, மீட்புப் பணிகள் இயக்குநா் பதிலளிக்க ச... மேலும் பார்க்க