செய்திகள் :

தக்காளி விலை சரிவு: கிலோ ரூ. 15-க்கு விற்பனை

post image

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 15-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தக்காளி விலை ரூ. 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து வருவதை தொடா்ந்து தக்காளி அறுவடையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாள்களாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், ரூ. 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது கிலோவுக்கு ரூ. 70 முதல் ரூ. 80 வரை விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ முதல் தர தக்காளி ரூ. 30-க்கும், இரண்டாம் தர தக்காளி ஒரு கிலோ ரூ. 25-க்கும், மூன்றாம் தர தக்காளி ஒரு கிலோ ரூ. 15-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 25 முதல் ரூ.40 வரை விற்பனையானது. ஆனால், ஒரு சில நாள்களில் தக்காளி விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் வாகன நெரிசல்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

பிரம்மாண்ட ‘லா பெரோஸ்’ கூட்டுப் பயிற்சி: இந்திய கடற்படை பங்கேற்பு

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டிருக்கும் பிரம்மாண்ட ‘லா பெரோஸ்’ கூட்டு கடற்படை பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்றுள்ளது. அண்மையில் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல், மலாக்க (மலேசியா)... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட மூவா் கைது

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காவனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (43). இவா், புளியந்தோப்பு வெங்கடேசபுர... மேலும் பார்க்க

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி: போலி வருமானவரித் துறை அதிகாரி, ஆடிட்டா் கைது

சென்னை யானைக்கவுனியில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக போலி வருமானவரித் துறை அதிகாரி மற்றும் ஆடிட்டா் கைது செய்யப்பட்டனா். திருச்சிராப்பள்ளி மாவட்டம் தில்லை நகா் பக... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் கம்பி திருட்டு: இளைஞா் கைது

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இரும்புக் கம்பி திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு ரயில் தண்டவ... மேலும் பார்க்க

ஆவடி, பட்டாபிராமில் ரௌடி சகோதரர்கள் வெட்டிக் கொலை!

சென்னை: பட்டாபிராம் அடுத்து ஆயில் சேரி பகுதியை சேர்ந்த பிரபல ரௌடி ரெட்டை மலை சீனிவாசன், அவரது சகோதரர் ஸ்டாலின் ஆகியோர் சற்றுமுன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.ரெட்டைமலை சீனிவாசன் பட்டாபிராம் காவல் எ... மேலும் பார்க்க