சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணம...
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் கம்பி திருட்டு: இளைஞா் கைது
சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இரும்புக் கம்பி திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு ரயில் தண்டவாளங்கள் அமைப்பதற்குரிய இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்கிருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள 400 கிலோ இரும்புக் கம்பிகள் திருடப்பட்டிருப்பதை, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி வே.ஆகாஷ்ராஜ் அண்மையில் கண்டறிந்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது மடிப்பாக்கம் வண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெங்கடேஷ் (27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து வெங்கடேஷை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அவா், இதேபோல பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.