செய்திகள் :

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

post image

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.

கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந்த ரன்யா ராவ், சட்டவிரோதமாக ரூ.12.50 கோடி மதிப்புள்ள 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கண்டுபிடித்து கைதுசெய்தனர்.

2023 முதல் 2025-ஆம் ஆண்டுவரை 34 முறை துபைக்கு சென்று வந்துள்ள ரன்யா ராவ், சட்டவிரோதமாக ரூ.40 கோடி மதிப்புள்ள 49.6 கிலோ தங்கம் கடத்தியதோடு, வரிஏய்ப்பு, பணப்பதுக்கல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கை பதிவுசெய்து விசாரித்து வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம், உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதால், ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. எனினும், அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகளின் தடுப்புச் சட்டம் (கோஃபிபோசா) வழக்கிலும் கைதுசெய்யப்பட்டுள்ளதால், தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். ரன்யா ராவ், கர்நாடகத்தில் டிஜிபி பதவியில் உள்ள கே.ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார்.

இதனிடையே, இதே வழக்கில் கடந்த மார்ச் 9, 26-ஆம் தேதிகளில் பெல்லாரியைச் சேர்ந்த தங்க வியாபாரிகள் தருண் கொண்டராஜு, சாஹில் சகாரியா ஜெயின், ஜூலை 23-இல் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஹவாலா மற்றும் தங்க வியாபாரி பரத்குமார் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, ரன்யா ராவ், தருண் கொண்டராஜு, சாஹில் சகாரியா ஜெயின், பரத்குமார் ஜெயின் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை ரூ.270 கோடி அபராதம் விதித்த வருவாய் புலனாய்வு இயக்குநரகம், விளக்கம் கேட்டு தனித்தனியே நோட்டீஸ் அளித்துள்ளது.

தில்லியில் இருந்து பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் குற்றங்கள் செய்ததற்கான ஆதாரங்களுடன் தலா 2,500 பக்கங்கள் இணைப்பு கொண்ட தலா 250 பக்கங்கள் அடங்கிய நோட்டீûஸ அளித்தனர். மொத்தமாக 11,000 பக்கங்கள் கொண்ட நோட்டீûஸ வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அளித்துள்ளனர்.

மொத்தம் 127 கிலோ தங்கத்தை கடத்தியதற்காக ரூ.270 கோடி அபராதம் விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், 49.6 கிலோ தங்கம் கடத்தியதற்காக ரன்யா ராவுக்கு ரூ.102.55 கோடி, 72.6 கிலோ தங்கம் கடத்தியதற்காக தருண் கொண்டராஜுவுக்கு ரூ.62 கோடி, தலா 63.61 கிலோ தங்கம் கடத்தியதற்காக சாஹில் சகாரியா ஜெயின், பரத்குமார் ஜெயினுக்கு தலா ரூ.53 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுங்கவரி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரன்யா ராவுக்கு எதிரான கோஃபிபோசா தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் அடுத்த விசாரணையை செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை கலந்துகொண்டுள்ளார்.இதற்காக சென்னையில் இருந்து இன்று பகல் தனி விமானம் மூலம் திருச்சி வந்த கு... மேலும் பார்க்க

ரூ.33 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 20 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ரூ.33 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 20 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். மக்கள் விடுதலை கெரில்லா ராணுவத்தின் பட்டாலியன் எண்.1 மாவோயிஸ்டுகளின் வலியான ராணுவ அம... மேலும் பார்க்க

ஹிமாசலை சூறையாடும் மழை! நிலச்சரிவுக்கு 6 பேர் பலி; 1,150 சாலைகள் துண்டிப்பு!

ஹிமாசல் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் செவ்வாய்க்கிழமை இரவு பலியாகினர்.மேலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் ப... மேலும் பார்க்க

தெலங்கானா எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் கவிதா!

தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை கே. கவிதா புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.பாரதிய ராஷ்டிரிய சமிதியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கவிதா, கட்சிக்கு களங்கள் விளைவிக்கும் செயலில் ஈடு... மேலும் பார்க்க

ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஸ்விக்கி நிறுவனம் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 14-ஆக உயர்த்திய நிலையில், சொமேட்டோ நிறுவனமும் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 12-ஆக உயர்த்தியுள்ளது.வரவிருக்கும் பண்டிகைக் காலத்த... மேலும் பார்க்க

ஜம்மு, ஹிமாச்சல், பஞ்சாபிற்கு தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

வட மாநிலங்களைப் புரட்டிப்போட்டு வரும் கனமழை வெள்ளம் தொடர்வதால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் ஆகிய 3 மாநிலங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. க... மேலும் பார்க்க