ஜஸ்ட் ஒன் கால் ப்ளீஸ்! - திடீரென வரும் விருந்தாளிகளுக்கு சமர்ப்பணம்
தங்கத்தைத் தாண்டி பெண்கள் எதில், எப்படி முதலீடு செய்யலாம்? | Labham
சிக்கனம், சேமிப்பு என்று வந்தால், நம் பெண்களை உலகத்தில் யாரும் மிஞ்ச முடியாது. கணவர் எவ்வளவு குறைவாக சம்பாதித்து வந்தாலும், அதற்கு வீட்டுக்குத் தேவையான செலவுகளை செய்து, குடும்பத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறவர்கள் நம் பெண்கள்தான். பெண்கள் கட்டுக்கோப்புடன் செலவுகளை செய்யும்போது அந்த வீட்டில் கடன் என்பது இல்லாமலே போய்விடுகிறது.
சேமிப்பு விஷயத்தில் கெட்டியாக இருக்கும் பெண்கள், முதலீடு என்று வந்தால் ‘இதுக்கும் எனக்கு சம்பந்தம் இல்லை’ என்று நினைப்பதுதான் நம் பெண்களின் எண்ணமாக இருக்கிறது. அல்லது, ‘தங்கம் வாங்கவே இருக்கிற பணம் போதல்ல’ என்றுதான் நினைக்கிறார்கள்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தைத் தங்கம், வெள்ளி மாதிரியான பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. அல்லது, வங்கி ரெக்கரிங் டெபாசிட், நகைச் சீட்டு, சீட்டுத் திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்வதிலும் எந்தத் தவறும் இல்லை.
ஆனால், இந்தத் திட்டங்கள் எல்லாம் குறுகிய காலத்துக்கானவை. நீண்ட காலத்தில் நம் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சேர்க்க நம் பெண்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால், பல பெண்களுக்கும் தெளிவான திட்டம் எதுவும் இல்லை என்பதுதான் மறுக்க முடியாத பதில்.

பெண்கள் தங்களுடைய நீண்ட கால இலக்குகளை நிறைவேற்றத் தேவையான பணத்தை என்ன மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்யலாம், அப்படி செய்யும்போது என்ன மாதிரியான விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் எடுத்துச் சொல்ல ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் ஒரு சிறப்பு ஆன்லைன் கூட்டத்தை நடத்த இருக்கிறது.
இந்த ஆன்லைன் கூட்டம் வருகிற 15-ம் தேதி மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பதிவு செய்துகொள்வது அவசியம். https://forms.gle/UXpvGiimFoqtpvNaA என்கிற இந்த லிங்க்னை சொடுக்கி, உங்கள் பெயரை எளிதாகப் பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் பெண்கள் தங்கள் எதிர்கால முதலீட்டை எப்படி அமைத்துக்கொள்ளலாம் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஆன்லைன் கூட்டத்தில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம். 18 வயது முதல் 60 வரை உள்ள எல்லா பெண்களும் தங்கள் பெண் குழந்தைகளுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம். இந்தக் கூட்டத்தில் ஆண்கள் கலந்துகொள்ள வேண்டும் எனில், அவர்களின் மனைவியின் பெயரில் பதிவு செய்துகொண்டு, கணவன் - மனைவி என தம்பதி சகிதமாக கலந்துகொள்ளலாம்.
இந்த ஆன்லைன் கூட்டத்தில் உலகம் முழுக்க உள்ள தமிழ் பெண்கள் கலந்துகொண்டு பயன் பெறலாமே…!