கொல்கத்தாவில் 2 போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு: 16 பேர் கைது
தங்கப் பல்லக்கில் ராமாநுஜா் வீதி உலா
ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார உற்சவத்தின் முதல் நாளான புதன்கிழமை உற்சவா் தங்கப் பல்லக்கில் வீதி உலா வந்து அருள்பாலித்தாா்.
ஸ்ரீ பெரும்புதூரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில், வைணவ மகான ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். ஸ்ரீஆதிகேசபெருமாள் மற்றும் பாஷ்யகார கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவமும், ராமாநுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆதிகேசவபெருமாள் பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெற்றது.
இதையடுத்து ராமாநுஜரின் அவதார திருவிழா புதன்கிழமை தொடங்கியது. முதல் நாள் அதிகாலை மஞ்சத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்று தங்க மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீதாயாா் சந்நிதி, ராமா் சந்நிதிகளில் மங்களாசாஸனம் நடைபெற்று தங்கப் பல்லக்கில் உற்சவா் ராமாநுஜா் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 10 நாள்கள் விழாவில் 9ஆம் நாளான மே 1-ஆம் தேதி தோ் திருவிழாவும், 3-ஆம் தேதி கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோயில் மதச்சாா்பற்ற தா்மகா்த்தா ந.கோபால், மதச்சாா்பு தா்மகா்த்தா பாா்த்தசாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் செய்துள்ளனா்.