செய்திகள் :

தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 72,800-க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து, ரூ.73,240-க்கு விற்பனையானது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.9,140-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ. 9,100-க்கும் , பவுனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 72,800-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு 30 குறைந்து ரூ.7,500-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.60,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை குறைந்தது

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.124-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ. ரூ.1.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் பணி நீக்கம்

The price of gold jewellery in Chennai fell by Rs. 360 per sovereign for the second day on Wednesday, selling at Rs. 72,800.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 17,880 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழம வினாடிக்கு 17,235 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,880 கன அடியாக அதிகரித்துள்ளது.... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்ற வானிலை எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக வியாழக்கிழமை(ஜூலை 17) அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தெற்... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?: அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை (ஜூலை 16) சைதாப்பேட்டை, 140 ஆவது வார்டு, சென... மேலும் பார்க்க

திருவள்ளுவரை அவமதிப்பது மன்னிக்க முடியாத செயல்: ப.சிதம்பரம்

காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை குறள் என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், போலி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற நாகாலாந்து வாலிபர் கைது

பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகளஅ வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்த நாகாலாந்து வாலிபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவ... மேலும் பார்க்க

ரூ.9 கோடி இழப்பீடு கோரி ரவி மோகன் வழக்கு: படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

சென்னை: குறித்த காலத்தில் படப்பிடிப்பை துவங்காத காரணத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்... மேலும் பார்க்க