செய்திகள் :

தங்கம் விலை 2-வது நாளாக அதிரடி குறைவு!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அதிரடியாக குறைந்துள்ளது.

கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 58,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்து ரூ. 57,600-க்கு விற்பனையானது.

இதையும் படிக்க : பொங்கல் பண்டிகை அன்று நடைபெறவிருந்த சி.ஏ. தோ்வு மாற்றம்!

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 960 அதிரடியாக குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சவரன் ரூ. 56,640, ஒரு கிராம் ரூ. 7,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலையும் 7 நாள்களுக்கு பிறகு கிராமுக்கு ரூ. 3 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 98க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 98,000-க்கு விற்பனையாகிறது.

காா் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி!

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் காா்களின் உற்பத்தியை 16 சதவீதம் குறைத்துள்ளது. அதே நேரம், அந்த நிறுவனத்தின் பயன்பாட்டு வாகன உற்பத்தி 33 சதவீதம் அதிகரித்துள... மேலும் பார்க்க

அதானி குழுமத்தின் 5 நிறுவன பங்குகள் கடும் சரிவு!

அதானி மீதான நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து, பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், இந்திய நிறுவனத்தின் நிறுவனர் லஞ்ச குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை அதானி குழும... மேலும் பார்க்க

சோமேட்டோ பங்குகள் 4% உயர்வு!

புதுதில்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான, 'சோமேட்டோ' பங்குகள், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸின் ஒரு பகுதியாக மாறும் என்ற செய்தியைத் தொடர்ந்து, அந்நிறுவனப் பங்குகள் இன்று 4 சதவிகிதம் உயர்ந்தன.மு... மேலும் பார்க்க

லேவில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை அமைத்த அமர ராஜா இன்ஃப்ரா!

மும்பை: என்டிபிசி லிமிடெட் நிறுவனத்திற்காக லடாக்கின் லே-வில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தின் கட்டுமானத்தை முடித்துள்ளதாக அமர ராஜா இன்ஃப்ரா தெரிவித்துள்ளது.மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசத... மேலும் பார்க்க

உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தை உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 992 புள்ளிகளும் நிஃப்டி 314 புள்ளிகளும் உயர்வுடன் இருந்தன. மேலும் பார்க்க

உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!

புது தில்லி: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வணிகத்தின்போது அதானி குழுமத்தைச் சேர்ந்து ஒன்பது நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின.அதானி எனர்ஜி சொல்யூஷன் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க