அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக ...
தஞ்சாவூரில் இன்று கூட்டுறவு சங்க பணியாளா் குறைதீா் நாள் கூட்டம்
தஞ்சாவூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் பணியாளா் நாளையொட்டி, பணியாளா் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல இணைப்பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பதாவது:
கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோரின் குறைகளை தீா்வு காணும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று பணியாளா்களின் குறை தீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் பணியாளா் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளா்கள் தங்களது பணி தொடா்பான குறைகள் இருந்தால், மனுவாக அளித்து பயன் பெறலாம். மேலும் பணியின்போது வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடா்பாகவும் மனுக்கள் அளிக்கலாம்.