``நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்; அதற்காக..." - ஒட்டன்சத்திரம் ஐ.டி ரெய்ட...
தஞ்சாவூரில் 4 டன் நெகிழி பொருள்கள் பறிமுதல்
தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் 4 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் அய்யன்கடைத் தெரு மற்றும் அருகிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவது தொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, நெகிழிப் பைகள், குவளைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக 45 கடைகளின் உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 9 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.