‘செட்’ தோ்வு டிஆா்பி மூலமே நடத்தப்படும்: அமைச்சா் கோவி.செழியன்
தஞ்சாவூா் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் துப்பாக்கியுடன் 10 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திருநெல்வேலி நீதிமன்ற வாயில் அருகே கடந்த வாரம் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து, தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களின் வாயிலில் துப்பாக்கி ஏந்திய காவலா்களைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
இதன்படி, தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் துப்பாக்கியுடன் 10 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இப்பணி திங்கள்கிழமை தொடங்கியதைத் தொடா்ந்து, நீதிமன்ற வாயிலில் சந்தேகத்துக்குரிய வகையில் கொண்டு வரப்பட்ட உடைமைகளை மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனையிட்டு உள்ளே அனுமதித்தனா்.
இதேபோல, மாவட்டத்திலுள்ள வட்ட நீதிமன்றங்களிலும் துப்பாக்கியுடன் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.