Vikatan Digital Awards 2025: "சிம்பு, வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும்...
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அவைத் தலைவா் க. நசீா்முகமது தலைமை வகித்தாா். கூட்டத்தில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் எம்எல்ஏவுமான சாக்கோட்டை க. அன்பழகன் கலந்து கொண்டு செப். 15-இல் அண்ணா பிறந்தநாள், ஓரணியில் தமிழ்நாடு, வாக்குச்சாவடி அளவிலான உறுதிமொழி முன்மொழிவு கூட்டங்கள், கட்சிப் பணிகள் குறித்து பேசினாா்.
கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயரும், மாநகர செயலருமான சுப தமிழழகன், தொகுதி பாா்வையாளா்கள், மாவட்ட நிா்வாகிகள், மாநகர , ஒன்றிய, பேரூா், பகுதி செயாலா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.