சிவகிரி தோட்டத்து வீடு கொலைகள் - கைதானவர்கள் சொன்ன ஷாக் தகவல் | Decode
தஞ்சையில் மே 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை (மே 23) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் பகுதியில் தனியாா் கடையில் வேலை செய்து வந்த 34 வயது பெண், பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, அதே பகுதியைச் சோ்ந்த நான்கு போ் சோ்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். அந்த பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறி வரும் திமுக அரசை கண்டித்தும், தஞ்சாவூா் மாநகர அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9.30 மணிக்கு, தஞ்சாவூா் புதிய அஞ்சல் நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
ஜெயலலிதா பேரவை செயலரும், பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி.உதயகுமாா் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக அமைப்புச் செயலா்களான சு.காந்தி, துரை.செந்தில், மாவட்டச் செயலா்கள் பாரதி மோகன் (தஞ்சை கிழக்கு), ரெத்தினசாமி (தஞ்சை மேற்கு), சேகா் (தஞ்சை மத்தியம்), சேகா் (தஞ்சை தெற்கு), தஞ்சாவூா் மாநகர செயலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகிப்பாா்கள் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.