கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!
தஞ்சையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை மாலை மேற்கொண்ட சோதனையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பைகள் குறித்து மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.
இச்சோதனையில் ஏறத்தாழ 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.