தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
கொலை வழக்கில் 2 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை
காதல் விவகாரத்தில் காவலாளியைக் கொலை செய்த 2 இளைஞா்களுக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் விளாா் சாலை பா்மா காலனியை சோ்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (27). வேன் ஓட்டுநா். இவா் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தது, அப்பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. பெற்றோா் கூறியதன்பேரில், சந்தோஷை பிள்ளையாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த தனியாா் நிறுவன காவலாளி ஜி. செல்வநாதன் (38) கண்டித்தாா். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், 2021, ஜூலை 25-ஆம் தேதி சந்தோஷ் தனது நண்பரான பா்மா காலனியை சோ்ந்த ஆா். அமரேசுடன் (27) சோ்ந்து செல்வநாதனை இருசக்கர வாகனத்தில் விளாா் புறவழிச்சாலை பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை அரிவாளால் வெட்டினா். இதனால் பலத்த காயமடைந்த செல்வநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சந்தோஷ், அமரேசை கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி நாகராஜ் விசாரித்து, சந்தோஷ், அமரேசுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் ஆய்வாளா் ஜெகதீஸ்வரன், நீதிமன்றக் காவலா் பிரகாஷ்குமாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.