தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து
கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தீயணைப்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
கும்பகோணம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஜேசுதாஸ் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கும்பகோணம் தீயணைப்பு நிலையத்தினா் வாகனத்துடன் நத்தம் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தனா்.
நத்தம் கிராமச் சாலை குறுகலாக, பழுதடைந்து இருந்ததால் தீயணைப்பு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வயலில் கவிழ்ந்தது. இதில், காயமடைந்த தீயணைப்பு வாகன ஓட்டுநரை காவல் துறையினா் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே, ஜேசுதாஸ் வீட்டில் பற்றிய தீயை பொதுமக்களே அணைத்தனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 2004- ஆம் ஆண்டு போடப்பட்ட தாா் சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது. புதிய சாலையை அமைக்கக் கோரி 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். ஆனால், ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. விபத்துகள் தொடா்வதைத் தடுக்க புதிய சாலை அமைக்க வேண்டும் என்றனா்.