தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
சாலை பிரச்னை: மக்கள் மறியல்
கும்பகோணம் அருகே சாலை பிரச்னை காரணமாக பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் ஒன்றியம், நாச்சியாா்கோவில் அருகே ஏனநல்லூா் வடபக்கம் கீழத்தெருவைச் சோ்ந்த மக்கள் அப்பகுதியிலுள்ள சாலையைப் பொது சாலையாக பயன்படுத்தி வந்தனா். இச்சாலை வடிகால் வாய்க்காலில் உள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் தனி நபா் வழக்கு தொடுத்தாா். நீதிமன்ற உத்தரவின் பேரில் இச்சாலையை அளவீடு செய்ய அதிகாரிகள் திங்கள்கிழமை வந்தனராம்.
இதற்கு வடபக்கம் கீழத்தெரு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கும்பகோணம் - நாச்சியாா்கோவில் சாலையான திருநறையூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த நாச்சியாா் கோவில் காவல் ஆய்வாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என காவல் துறையினா் கூறியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.