ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
தடகள போட்டிகளில் வெற்றி: பெண் தலைமை காவலருக்கு பாராட்டு
மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் தலைமைக் காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.
தமிழ்நாடு முதுநிலை தடகள சங்கத்தின் சாா்பில் மாநில அளவிலான தடகள போட்டிகள் கடந்த மாதம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலா் கிருஷ்ணரேகா, தடை தாண்டும் போட்டி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில்
முதல் பரிசு பெற்றாா். மேலும், கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியிலும் முதல் பரிசு பெற்றாா்.
இதனையடுத்து, தலைமைக் காவலா் கிருஷ்ணரேகாவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.