நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு...
தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கைது
தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு ரவி, முன்னாள் எம்பி கோ. அரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ளது எம்ஆர்எப் தொழிற்சாலை. இங்கு சில நாள்களாக தற்காலிக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக திங்கள்கிழமை காலை ஆலை நுழைவாயில் முன்பாக நுழைவு வாயில் கூட்டம் நடத்த அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு ரவி, முன்னாள் எம்பி கோ அரி, ஒன்றிய அதிமுக செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் வந்தனர்.
அப்போது அங்கிருந்த போலீஸார் ஆலை நுழைவு வாயில் கூட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு விதித்திருப்பதாக அதிமுக எம்எல்ஏவிடம் தெரிவித்தனர். இருந்தும் தடையை மீறி அங்கு நுழைவு வாயில் கூட்டம் நடத்த முயன்றதாக அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு ரவி, முன்னாள் எம்பி கோ அரி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை: மின்விநியோகம் பாதிப்பு
கைது செய்யப்பட்ட 13 பேரும் வேனில் அழைத்துச் செல்லப்பட்டு அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அரக்கோணம் அண்ணா திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.