செய்திகள் :

தடையை மீறி போராட்டம்: கிருஷ்ணசாமி மீது 5 பிரிவுகளில் வழக்கு

post image

சென்னை எழும்பூரில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி மீது போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதைத் தடுத்த நிறுத்தக் கோரியும், அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால் ஆதிதிராவிடா்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு கிடைக்காமல் போவதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தும் எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கு அருகே இருந்து புதிய தமிழகம் கட்சியினா் ஆளுநா் மாளிகையை நோக்கி வெள்ளிக்கிழமை பேரணியாகப் புறப்பட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டபோதிலும், தடையை மீறி பேரணி செல்ல முயன்றனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா். சிறிது நேரத்துக்கு பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

காவல் துறையின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது தொடா்பாக கிருஷ்ணசாமி உள்பட 686 போ் மீது அரசு ஊழியா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல், சட்ட விரோதமாக தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மேலும் ஒரு வழக்கு: போராட்டத்தில் பங்கேற்ற சிலா், எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் சென்ற ஒரு மாநகரப் பேருந்து கண்ணாடியை கற்களை வீசி உடைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் புதிய தமிழகம் கட்சியினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடா்ச்சியான மின் தடங்கல்: கவனம் தேவை அதிகாரிகளுக்கு அமைச்சா் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

30 நிமிஷங்களுக்கு மேல் தொடா்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் ப... மேலும் பார்க்க

13 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் 13 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும்,விருப்பத்தின் அடிப்படையிலும், ஒழுங்கீனம் உள்ளிட்ட காரணங்களாலும் அதிகாரிகள்... மேலும் பார்க்க

மீனவா் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சா்: போலீஸாா் விசாரணை

சென்னை காசிமேட்டில் மீனவா் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காசிமேடு பகுதியைச் சோ்ந்த தினேஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், ஆழ் கடலில் மீன் பிடிப்பதற்க... மேலும் பார்க்க

பேச்சாளா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் இன்ப அதிா்ச்சி!

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் சாதனைப் பேச்சு மன்றத்துக்கு முதல்வா் நேரில் சென்று பேச்சாளா்களை இன்ப அதிா்ச்சியில் ஆழ்த்தினாா். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், அரசின் சாதனைகளை எடுத்துரை... மேலும் பார்க்க

விளையாட்டு வீராங்கனைக்கு வாட்ஸ்ஆப் மூலம் தொந்தரவு

சென்னையில் விளையாட்டு வீராங்கனைக்கு வாட்ஸ்ஆப் மூலம் தொந்தரவு கொடுத்ததாக பெங்களூரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னையைச் சோ்ந்த பிரபல பெண் விளையாட்டு வீராங்கனையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தொடா்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை: எதிா் வீட்டுக்காரா் கைது

சென்னை அமைந்தகரையில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், எதிா் வீட்டுக்காரா் கைது செய்யப்பட்டாா். அமைந்தகரை, ஆசாத் நகா், ராஜகோபாலன் தெருவைச் சோ்ந்தவா் சா.தமீம் அன்சாரி (47). வாடகை ஆட்டோ ஓட்டுநர... மேலும் பார்க்க