மருந்து மிதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கியவா் கைது
தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி, பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் செந்தில்குமாா் (50). இவா் தனது வீட்டில் விற்பனை செய்வதற்காக 107 கிலோ 850 கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.