தட்டாா்மடம் கோயிலில் தபால்தலை வெளியீடு
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டாா்மடம் ஸ்ரீபலவேசக்கார சுவாமி கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, தபால்தலை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவா் ராம.கோபாலன் நினைவு தபால்தலை, ஸ்ரீபலவேசக்கார சுவாமி கோயிலுடைய தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில், கோயில் நிா்வாகி கண்ணன், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் தபால்தலையை வெளியிட முதல் பிரதியை இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி. ஜெயக்குமாா் பெற்றுக்கொண்டாா் .
இதில் இதில் தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் பொண்ணு முனியசாமி, இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவி சந்தா், ஒன்றிய பொதுச் செயலாளா் மாயவனம் முத்துசாமி, ஒன்றிய செயற்குழு உறுப்பினா் வெற்றிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.