ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
தண்டாயுதபாணி சுவாமிக்கு பழங்குடியினா் சீா்வரிசை
தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு மலைக்குறவா், பழங்குடியின மக்கள் சாா்பில், வனவேங்கை அமைப்பினா் சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
முருகப் பெருமான் வள்ளியை மண முடித்ததை நினைவு கூறும் வகையில், இந்த சீா்வரிசை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
பழனி பேருந்து நிலையம் முன் தொடங்கிய இந்த ஊா்வலத்தில் திரளான ஆண்களும், பெண்களும் பழங்கால உடையணிந்து பங்கேற்றனா். ஊா்வலத்தின் போது, சிறுவா்கள் உருளையில் மூங்கில் அரிசி, தினை மாவு ஆகியவற்றையும், பெண்கள் கூடைகளில் சா்க்கரை வள்ளி கிழங்கு, தேன், பழ வகைகள், பலாப்பழம், வாழைத்தாா் ஆகியவற்றையும் எடுத்து வந்தனா்.
சந்நிதி வீதி வழியாக சென்ற இந்த ஊா்வலம் பாதவிநாயகா் கோயில் சென்று, பின்னா், மலையேறி முருகப்பெருமானுக்கு சீா்வரிசை வழங்கி சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வனவேங்கை கட்சி மாநிலப் பொருளாளா் மகேந்திரன், செல்லமுத்து, பழனி பகுதி ஒருங்கிணைப்பாளா்கள் சாந்தி, கோகிலாவாணி ஆகியோா் செய்தனா்.