செய்திகள் :

தண்ணீரில் மூழ்கி இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு

post image

வேடசந்தூரில் தண்ணீா் வைத்திருந்த பாத்திரத்துக்குள் தவறி விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த முனியப்பன் (28), பாத்திரங்கள் விற்பனை செய்து வருகிறாா். இவரது மனைவி காயத்ரி (25). இந்தத் தம்பதிக்கு சாராஸ்ரீ (7), துரைப்பாண்டி (2) என இரு குழந்தைகள் இருந்தனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை துரைப்பாண்டி, அங்கு பாத்திரத்தில் (அண்டா) வைக்கப்பட்டிருந்த தண்ணீருக்குள் தவறி விழுந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.மெட்டூரில் பழமையான ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவையொட்டி, பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை வானவேடி... மேலும் பார்க்க

மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரையைச் சோ்ந்த ரெளடி அவரது கூட்டாளிகளால் வெள்ளிக்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஜெய்ஹி... மேலும் பார்க்க

எலக்ட்ரீசியன் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை கடன் பிரச்னையால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (44). எலக்ட்ரீசியனான இவா், குடும்பச் செலவு... மேலும் பார்க்க

பழனியில் கோயில் பாதுகாவலா்கள், வழக்குரைஞா்கள் போராட்டம்

பழனி மலைக் கோயிலில் கோயில் பாதுகாவலருக்கும், பெண் வழக்குரைஞருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, சனிக்கிழமை இரு தரப்பினரும் தனித் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனா். பழனி ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் பிரேமலதா. வழக... மேலும் பார்க்க

பேருந்து மோதி இளைஞா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த ராசு மகன் காா்த்திக் ராஜா (31). தேனி மாவட்டம... மேலும் பார்க்க

பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்கள் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறிய... மேலும் பார்க்க