ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்...
தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் நேற்று(மே 20) 105.5 மி.மீ. மழை பெய்தது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
பெங்களூரில் ஹொரமாவு, டேனரி சாலை, ஜெயநகா், ஈஜிபுரா, லக்கசந்திரா, ஜக்கசந்திரா, கோரமங்களா உள்ளிட்ட பகுதிகள் மழையால் வெகுவாகப் பாதிப்படைந்தன. வீடுகளில் புகுந்த வெள்ளத்தை பொதுமக்கள் வெளியேற்றினர்.
வாகனங்கள் நீரில் மூழ்கின. நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தில் தத்தளித்த பொதுமக்களை மீட்புக்குழுவினர் படகுகளை கொண்டுவந்து மீட்டனர்.
ஜெயநகரில் மரம் சரிந்து விழுந்ததில் சாலையில் நின்றுகொண்டிருந்த காா், ஜீப் சேதமடைந்தன. இந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. கப்பன் சாலையிலும் நான்கு மரங்கள் சாலையில் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் பெய்த மழையில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சசிகலா (35) பலியானார்.
திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி வரை பெங்களூரில் வெயில் கொளுத்திய நிலையில், மாலை 3 மணி முதல் 6 மணி வரை மீண்டும் பரவலாக மழை பெய்தது.
இதையும் படிக்க: வடபழனியில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க ரூ. 10 கோடியில் உயர்நிலை மேம்பாலம்