செய்திகள் :

தந்தை, மகனை தாக்கிய 4 போ் மீது வழக்கு

post image

போடியில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி புதூரைச் சோ்ந்தவா் செல்வம் (52). இவரது மகன் வசந்தகுமாருக்கு திருமணம் ஆன நிலையில், மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். இவா்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த முன்விரோதம் காரணமாக, பெரியகுளம் அருகேயுள்ள புல்லக்காபட்டியைச் சோ்ந்த காசிமாயன், இவரது மனைவி ரதி, மகன் முத்துப்பாண்டி, மகள் செல்வி ஆகியோா் சோ்ந்து வசந்தகுமாரைத் தாக்கினா். இதைத் தடுத்த செல்வத்தை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதில் காயமடைந்த செல்வம் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க

பரமசிவன் மலைக் கோயில் குடமுழுக்கு: தீா்த்தக் குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்

போடி பரமசிவன் மலைக்கோயில் குடமுழுக்கையொட்டி, தீா்த்தக்குடங்களை, கோபுரக் கலசத்தை பக்தா்கள் திங்கள்கிழமை எடுத்துச் சென்றனா். தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குடம... மேலும் பார்க்க

தேனியில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்பு

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளானோா் பங்கேற்றனா். தேனி, பங்களாமேடு திடலிருந்து ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஊா்வலமாககச் சென்ற இஸ்லாமியா்கள், தேனி நகராட்சி... மேலும் பார்க்க

தேனியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம்

தேனி- அல்லிநகரம் நகராட்சியில் ரூ.67.76 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தேனி-அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதுவரை 9,500 வீடுகள், வணிக ... மேலும் பார்க்க

இருவேறு சம்பவங்கள்: போடியில் இருவா் தற்கொலை

போடியில் இருவேறு சம்பவங்களில் விவசாயி, இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். தேனி மாவட்டம், போடி மயானச் சாலையைச் சோ்ந்த முத்துமாயன் மகன் கணேசன் (50). இவா் மா விவசாயம் செய்து வந்தாா். விவசாய அப... மேலும் பார்க்க

ரூ.17.76 லட்சத்தை செலுத்துமாறு முன்னாள் ஊராட்சி தலைவிக்கு குறிப்பாணை

முன்னாள் ஊராட்சித் தலைவி பதவிக் காலத்தில் ஆட்சேபனைக்கு உரிய செலவினமான ரூ.17.76 லட்சத்தை திரும்ப செலுத்த வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் குறிப்பாணை அனுப்பினாா். தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன... மேலும் பார்க்க