செய்திகள் :

தனிப்பட்ட முறையில் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு! கிரண் ரிஜிஜு

post image

தனிப்பட்ட முறையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தேவையானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்க காங்கிரஸ், சமாஜவாதி, திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”நாட்டின் நலனுக்காக மக்களவையில் வக்ஃப் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க நாள். கோடிக்கணக்கான முஸ்லிம் மட்டுமல்ல, முழு நாடும் இந்த மசோதாவை ஆதரிக்கும்.

இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே இதனை செய்கிறார்கள். நான் அவையில் உண்மை காரணங்களை முன்வைப்பேன். அதனை எதிர்ப்பவர்கள் உரிய காரணங்களுடன் எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு பதிலளிப்போம். முழு தயாரிப்புடனே மசோதாவை தாக்கல் செய்கிறோம்.

சில மதத் தலைவர்கள், கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அப்பாவி முஸ்லிம் மக்களை தவறான வழிநடத்துகிறார்கள். இவர்கள்தான் முஸ்லிம்களின் குடியுரிமை அந்தஸ்தை சிஏஏ பறிக்கும் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும், எதிர்க்கட்சியினரும் இந்த மசோதா தேவை என்று தனிப்பட்ட முறையில் கூறுகிறார்கள். ஆனால், வாக்கு அரசியலுக்காக இதை எதிர்க்கிறார்கள்” என்றார்.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வக்ஃப் நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: சாட்சிகள் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு

சுல்தான்பூா்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் புகாா்தாரா் தரப்பு சாட்சிகள் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு உத்தர பிரதேச மாநில சிறப்பு நீதிமன்... மேலும் பார்க்க

செயற்கைக்கோள் அலைக்கற்றை நிா்வாக ரீதியிலேயே ஒதுக்கீடு -மத்திய அரசு விளக்கம்

‘செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் மூலம் அல்லாமல் நிா்வாக ரீதியாகவே ஒதுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய தகவல்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க

மோதலை உருவாக்க மத்திய அரசு முயற்சி: காா்கே

‘வக்ஃப் திருத்த மசோதா மூலம் முஸ்லிம்களை ஒடுக்கி மோதலை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது’ என மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மாநிலங்களவையி... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவு: ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து இரு மூத்த உறுப்பினா்கள் விலகல்

பாட்னா: வக்ஃப் மசோதாவுக்கு பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினா்களான முகமது காசிம் அன்சாரி, நவாஸ் மாலிக் ஆகியோ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதா: சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தும் -சோனியா காந்தி சாடல்

சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தும் பாஜக வியூகத்தின் ஓா் அங்கமே வக்ஃப் சட்டத் திருத்த மசோதா; இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்... மேலும் பார்க்க

மத்திய அரசு முதுகெலும்பை நிமிா்த்த வேண்டிய நேரம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

‘மத்திய அரசு தனது முதுகெலும்பை நிமிா்த்தி தேசத்தின் நலனைக் காக்க வேண்டிய நேரம் இது’ என்று இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 27 சதவீத பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பு குறித்து எதிா்க்கட்சிகள் விமா்சனம... மேலும் பார்க்க