ரூ.16,518 கோடி தோ்தல் பத்திர நன்கொடை பறிமுதல்: உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு...
தனியாளாக போராடிய பட்லர்..! இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்கு!
முதல் டி20யில் வெற்றிபெற இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து உடனான முதல் டி20யில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டுமே தனியாளக நின்று போராடினார்.
68 ரன்கள் அடித்த பட்லர் வருண் சக்கரவர்த்தி ஓவரில் ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 132/10 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து ஸ்கோர் கார்டு
பிலிப் சால்ட் - 0
பென் டக்கெட் - 4
ஜாஸ் பட்லர் - 68
ஹாரி புரூக் - 17
லியாம் லிவிங்ஸ்டன் - 0
ஜகோப் பெத்தேல் - 7
ஜேமி ஓவர்டன் - 2
கஸ் அட்கின்ஸன் - 2
ஜோப்ரா ஆர்ச்சர் - 12
ஆடில் ரஷித் - 8*
மார்க் வுட் - 1
இந்தியாவின் அசத்தல் பந்து வீச்சு
வருண் சக்ரவர்த்தி 3, அர்ஷ்தீப் சிங், அக்ஷர் படேல், ஹார்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.
அர்ஷ்தீப் சிங் டி20யில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் (97) எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக சஹால் 96 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.