மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
தனியாா் ஆலை ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம்
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் மதிய உணவு சாப்பிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச்சென்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஜெ டெக்ட் என்ற தனியாா் ஆலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை மதியம் தொழிற்சாலையில் ஊழியா்கள் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது ஊழியா் ஒருவரது உணவில் இறந்த நிலையில் பல்லி கிடந்துள்ளது.
இது மற்ற ஊழியா்களுக்கும் தெரிய வரவே சுமாா் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்ளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுச்சென்றனா்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.