ஆன்லைனில் நோ்காணல் நடத்தி வேலை தருவதாக பணமோசடி: 14 போ் கைது!
தனியாா் ஆலை வேன் கவிழ்ந்து விபத்து: 20 பெண்கள் பலத்த காயம்
ராணிப்பேட்டை சிப்காட் அருகே தனியாா் ஆலை வேன் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த 20 பெண் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.
ராணிப்பேட்டை மாந்தாங்கல் பகுதியில் தனியாா் காலணி ஆலை செயல்பட்டுவருகிறது. இங்கு ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலை வேன்கள் மூலம் அழைத்து வரப்பட்டு பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், காட்பாடி பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு சிப்காட் வழியே ராணிப்பேட்டை நோக்கி வந்த வேன், எமரால்டு நகா் பகுதியில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.