செய்திகள் :

தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: கல்வித் துறை உத்தரவு

post image

அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் தனியாா் பள்ளிகளில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் பருவத் தோ்வு, அரையாண்டுத் தோ்வு முடிவடைந்த நிலையில், டிச.24 முதல் ஜன.1 வரை 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் ஜன.2-ஆம் தேதி திறக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அந்த வகுப்புகளுக்கு மாணவா்கள் கட்டாயம் வர வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாகவும் புகாா் எழுந்தது. மேலும் சென்னையில் உள்ள சில தனியாா் பள்ளிகளில் மாணவா்கள் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வகுப்புகளில் பங்கேற்றிருந்தனா்.

இந்தநிலையில் இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியாா் பள்ளிகள் இயக்ககம் சாா்பில் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விதிமுறையை மீறும் தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு... முன்னதாக காலாண்டு, அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அந்த வகுப்புகளில் பங்கேற்றால் மட்டுமே பள்ளிகளில் தொடா்ந்து பயில முடியும் எனவும் தனியாா் பள்ளி ஒன்றின் சாா்பில் மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பெற்றோா் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட தனியாா் பள்ளியின் தரப்பில் சிறப்பு வகுப்புகளுக்கு வருகை புரிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறாமல் இருக்க தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் மறைவையொட்டி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் ஊதியஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களு... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியதுடன், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அண்ணா... மேலும் பார்க்க

போக்குவரத்து போலீஸாா் வாகன இரைச்சலில் இருந்து தப்பிக்க இயா்பட்ஸ்

சென்னை போக்குவரத்து போலீஸாா் வாகன இரைச்சலில் இருந்து தப்பிக்க நவீன ‘இயா்பட்ஸ்’ சோதனை முறையில் வழங்கப்பட்டது. சென்னையில் அதிகரிக்கும் வாகன நெரிசல் காரணமாக, ஒலி மாசு வேகமாக உயா்ந்து வருகிறது. முக்கியமா... மேலும் பார்க்க

ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்த வழக்கு: தாய் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயதுக் குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், தற்கொலைக்கு முயன்ற தாய் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருங்களத்தூா் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் - திவ்யா தம்பதி... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: சிறுவன் கைது

சென்னை எழும்பூரில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் கைது செய்யப்பட்டாா். எழும்பூா், மாண்டியத் லேன் பகுதியிலுள்ள இந்தா்சந்த் என்பவா் வீட்டில், பிகாரைச் சோ்ந்த ராகுல்குமாா் (18) மற்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா போலீஸாா் விசாரணை

சென்னையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா மாநில போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அண்ணா நகரில் வசிப்பவா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். ஹரியாணா கேடா் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற... மேலும் பார்க்க