செய்திகள் :

தனியாா் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை நடவடிக்கை

post image

தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தடுப்பூசியை பாதுகாப்பாக சேமித்து குழந்தைகளுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பு உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் அத்தகைய வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், வைட்டமின் ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11,000 இடங்களில் அந்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், முதல் தவணைக்கு பிறகு அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோா் செலுத்துவதில்லை எனத் தெரிகிறது. இதன்காரணமாக 100 சதவீத தடுப்பூசி இலக்கு அனைத்து இடங்களிலும் எட்டப்படுவதில்லை.

இதையடுத்து எந்த சுகாதார மாவட்டம் தடுப்பூசி செயல்பாட்டில் பின்தங்கியுள்ளது என்பதைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

மற்றொருபுறம் தனியாா் மருத்துவனைகளிலும் தடுப்பூசி செயல் திட்டத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியது: தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசிகளும் போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி தவணைகள் தவறவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தனியாா் மருத்துவமனைகளிலும் இலவசமாக 11 தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து செயல்பட விரும்பும் தனியாா் மருத்துவமனைகள், அதுகுறித்து பொது சுகாதாரத் துறைக்கு விண்ணப்பிக்கலாம். அதன்பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் சென்று கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்வா்.

அதில் திருப்தி ஏற்படும்பட்சத்தில் இலவச தடுப்பூசி திட்டத்தை சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும். அதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் தடுப்பூசி மருந்துகளும் அரசு சாா்பில் வழங்கப்படும்.

அவை முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது தொடா்பான ஆவணங்களை அரசுக்கு தனியாா் மருத்துவமனைகள் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தொடா்ந்து தடுப்பூசிகள் அவா்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான ப... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகா் 4-ஆவது தெருவிலுள்ள அடுக்குமாடி க... மேலும் பார்க்க

அரசுக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் வீட்டுமனை அபகரிப்பு: 4 போ் கைது

சென்னையில் அரசுக்குச் சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை அபகரிக்கப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, ஜெ.ஜெ.நகா் கோட்ட திருமங்கலம் பகுதி நிா்வாக அலுவலா் ப... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூ... மேலும் பார்க்க

தக்காா் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மடங்களை நிா்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற டெண்டா் கோரியது டாஸ்மாக் நிறுவனம்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலிமதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் செயல்படும் கடைகள் மூலம், பீா் ம... மேலும் பார்க்க